தேன்கனிக்கோட்டை, ஜூலை 2: தளி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதிலிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 300 லிட்டர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனால் கொல்லப்பள்ளி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் பெனிட்டா ஆன்டனிமேரி, தளி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement


