Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டாஸ்மாக் பார் உரிமையாளரின் தம்பியை தாக்கி கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

திருவள்ளூர்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் சதீஷ்(34). இவரது அண்ணன் குணசேகரன் என்பவர் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் குலசேகரன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ளார். இதனையடுத்து குணசேகரனின் தம்பி சதீஷ் கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் பாரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு 8.30 மணி அளவில் சதீஷ் பாரில் இருந்தபோது அங்கு வந்த மணவாளநகர் பகுதி சேர்ந்த அருண்(29) என்பவர் கண்ணாடி கதவை காலால் எட்டி உதைத்துள்ளார். அதற்கு சதீஷ் ஏன் காலால் எட்டி உதைக்கிறீர்கள்? என கேட்டதற்கு பீர் பாட்டிலால் சதீஷை மூக்கில் அடித்துள்ளார். பின்னர் உடைந்த பீர்பாட்டிலைக் கொண்டு சதீஷின் வலது முழங்கையில் குத்தியுள்ளார்.

அப்போது அதை தடுக்க வந்த தனசேகரன் என்பவரை அருண் மற்றும் அவருடன் வந்த அரவிந்தன்(28) ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து காயப்படுத்தி உள்ளனர். மேலும் சதீஷின் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்ததோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சதீஷ் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.