ஜெயங்கொண்டம் ஜூலை 13:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தொட்டிக்குளம் கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு விழா நாளிலும் பாப்பாத்தி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர் போன்ற 16 வகையான திரவங்களால் அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது . முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சக்தி கரகம் அழைத்து, தீமிதி திடலுக்கு பாப்பாத்தி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது . பின்னர் பூங்கரகம், அக்னி கரகம் ஏந்தி வந்தோர் தீ மிதித்தனர். பின்னர் பக்தர்கள் ஏராளமானோர் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் தொட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.