அவிநாசி, ஜன.18: சேவூரில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர், சேவூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினர்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சின்னகண்ணு, மாவட்ட பிரதிநிதி தங்கவேலு, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் முருகசாமி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி கண்ணன், விவசாய அணி ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், தொழில் நுட்ப பிரிவு ஜெகன், அதிமுக நிர்வாகிகள் பேபி, திருமூர்த்தி, சுப்பிரமணி, தினேஷ்குமார், அய்யாசாமி சின்னச்சாமி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


