கோவை, ஜூலை 9: கோவை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சின்னவேடம்பட்டி பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன்காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி வழுக்கி விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


