Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.489 கோடியில் 3987 சாலை பணிகள்: போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவு நேரங்களில் நடக்கிறது

சென்னை, ஜூன் 20: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.489 கோடியில் 3987 எண்ணிக்கையிலான சாலை அமைக்கும் பணிகள் போக்குவரத்திற்கு இடையூறின்றி இரவு நேரங்களில் நடப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தட சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 266 கி.மீ. நீளத்திற்கு 375 எண்ணிக்கையிலான பேருந்து சாலைகள் மற்றும் 2,170 கி.மீ. நீளத்திற்கு 13,909 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு, 2025 -26ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.489.22 கோடி மதிப்பீட்டில் 650.90 கி.மீ நீளத்திற்கு 3,987 எண்ணிக்கையிலான சாலைகள் அமைக்கும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில், தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சிறப்புத் திட்ட நிதியின் கீழ் ரூ.180 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.393.22 கோடி மதிப்பீட்டில் 3642 சாலைப் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு, கடந்த மே மாதம் 20ம்தேதி பணியானை வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் மொத்தம் ரூ.150 கோடியில் 1195 எண்ணிக்கையிலான சாலைகள் 203.18 கி.மீ நீளத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள 1154 உட்புறச் சாலைகளில், அதன் நீளம் 171.24 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.108.41 கோடி மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, 39 சாலைகள் அதன் நீளம் 5.41 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.3.33 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 224 சாலைகள் அதன் நீளம் 32.65 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.18.08 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. 41 பேருந்து தட சாலைகளில், அதன் நீளம் 31.94 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.41.54 கோடி மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, அதில் 11 பேருந்து தட சாலைகளில் அதன் நீளம் 7.79 கி.மீ ரூ.9.49 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் நடந்து வருகிறது.

நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் உள்ள மொத்தம் 857 உட்புறச் சாலைகளில், அதன் நீளம் 119.80கி.மீ சாலைப் பணிக்கு ரூ.63.22 கோடி மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, அதில், 38 சாலைகள் அதன் நீளம் 5.89 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.3.56 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 192 சாலைகள் அதன் நீளம் 26.01 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.13.78 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

சிறப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் உள்ள மொத்தம் 1590 உட்புறச் சாலைகளில், அதன் நீளம் 238.52கி.மீ சாலைப் பணிக்கு ரூ.180 கோடி மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, அதில், 12 சாலைகள் அதன் நீளம் 2.27 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 181 சாலைகள் அதன் நீளம் 30.36 கி.மீ சாலைப் பணிக்கு ரூ.17.49 கோடி மதிப்பீட்டிற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், ரூ.96 கோடி மதிப்பீட்டில் 89.40 கி.மீ. நீளத்திற்கு 345 எண்ணிக்கையிலான பேருந்து சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் இந்த சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.