செங்கம் நகரில் 1850 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் திருப்பணிகள் தீவிரம் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது
செங்கம், ஜூன் 18: செங்கம் நகரில் 1850 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. செங்கம் நகரில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 1850 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் துர்க்கை அம்மன் கோயில் தெருவில் உள்ளது. தற்போது இந்த கோயிலுக்கு தமிழக இந்து சமய அறநிலை துறை சார்பில் ₹20 லட்சம் ஒதுக்கீடு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 30ம் தேதி வெகு விமரிசையாக காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி கோயில் வளாகத்தில் தரைத்தளம் அமைப்பது, வர்ணம் தீட்டுவது, மின்விளக்கு போன்ற அடிப்படை பணிகள் வெகு விரைவாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றும் ஒரு சிறப்பாக 1850 ஆண்டுகள் வராகி அம்மன் சிலை மற்றும் கன்னிமார்கள் சிலைகள் அரிய பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து தற்போது குடமுழுக்கு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு பெ.கிரி, திருப்பணி குழு தலைவர் வக்கீல் கஜேந்திரன், அறங்காவலர் குழு தலைவர் மு.அன்பழகன், அறங்காவலர்கள் ஸ்ரீதர் செந்தில்குமார், இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர் சத்யா உட்பட பலரும் திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


