ஈரோடு, ஜூன் 16: சிவகிரி அடுதுள்ள குலவிளக்கு கிராமம் பூசாரிபாளையத்தில் மதுரைவீரன் கோயில் அருகில் சூதாட்டம் நடப்பதாக சிவகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பூசாரிபாளையம் காலனியை சேர்ந்த சிலம்பரசன் (34), பழனிசாமி (38), முருகன் (56), வெங்கடாச்சலம் (45), கண்ணன் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.2140 பறிமுதல் செய்யப்பட்டது.


