Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சீர்காழியில் 30 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் நகராட்சி பணியாளர்கள் அதிரடி

சீர்காழி, ஜூன் 24:சீர்காழியில் 30 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈவேரா தெரு, பிடாரி வடக்கு வீதி பழைய பேருந்து நிலையம் , உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் , தேநீர் கடை, பூக்கடை பழக்கடை உள்ளிட்ட கடைகளில் பயன்படுத்தப்படுகின்றனர் இந்த நிலையில் நகராட்சி ஆணையர் பொறுப்பு சங்கர் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பழனிச்சாமி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கலியபெருமாள் இளம் நிலை உதவியாளர் பாபு மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் சோதனை செய்தனர்.

சோதனையில் 30கிலோ எடையுள்ள அரசாாலால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கடைகளுக்கும் மொத்தமாக ரூ 7000 அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைபைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.