குமாரபாளையம், ஜன.18: மதிமுக நகர செயலாளர் பள்ளிபாளையம் ரமேஷ், குமாரபாளையம் நீலகண்டன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் பெரியார் குறித்து அவதூறு பரப்பி வரும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
+
Advertisement


