விகேபுரம்,ஏப்.26: விகேபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வராகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி இசக்கியம்மாள் (32), இவர் சிவந்திபுரம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த வாரகாபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஒட்டி வந்த ஆட்டோ நடந்து சென்று கொண்டிருந்த இசக்கியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த இசக்கியம்மாள் அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையில் இசக்கியம்மாள் மீது ஆட்டோ மோதும் சம்பவம் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் விகேபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


