Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவகிரி பகுதியில் பைக் திருடிய 2 பேர் கைது

சிவகிரி, ஜூலை 3:சிவகிரியில் பைக்குகள் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். சிவகிரி தேவிப்பட்டணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முருகன்(48). விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த 30ம்தேதி இரவு தனது பைக்கை வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயில் அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது பைக்கை காணவில்லை.இதுபோல் தேவிபட்டணம் கிருஷ்ணகோயில் தெருவைச் சேர்ந்த அரிசந்திரன் மகன் சத்தியராஜ் (28) இவர் கடந்த 30ம்தேதி இரவு தனது பைக்கை அங்குள்ள மெடிக்கல் ஸ்டோர் அருகே நிறுத்திவிட்டு சிவகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகன், சத்தியராஜ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதில் ராஜபாளையம் நல்லமங்களம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைஒளிவு மகன் இசக்கி (32), தேவிப்பட்டணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மகன் காளிகுமார் (28) ஆகிய 2 பேரும் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரு பைக்குகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.