சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் இன்று (ஜூன் 13) இளநிலை மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் இரண்டு சுழற்சிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல்நிலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட 11 துறைகள் உள்ளன. இதில் 10 துறைகளுக்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்நிலையில் இக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 4 முதல் தொடங்கி தற்போது வரை இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இன்று மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 9 மணிக்கு முன்பு கல்லூரிக்கு வர வேண்டும். மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல்கள், அனைத்து சான்றிதழ்களின் மூன்று நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும் கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


