கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று மதியம் அகில இந்திய விவசாய சங்கங்களின் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.சிதம்பரம் காந்தி சிலை அருகே விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு, ரயில் நிலையம் சென்றனர்.
அப்போது, அங்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றம் போலீசார் அவர்களை ரயில் நிலையம் வளாகம் முன் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 25 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


