Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானில் தஞ்சை பயணி உயிரிழப்பு

திருச்சி, நவ.11: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த தஞ்சை மாவட்ட பயணி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில சிறிது நேரத்தில் அதில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த 32 வயது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் விமான பணியாளர்களிடம் தெரிவித்தார்.

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். விமானம் இலங்கை வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, பயணியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க விமானத்தை அவரசரமாக இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கினர். அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சிங்கப்பூர் விமானம் சில மணி நேரம் தாமதமாக திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 3.30 வந்தது. இறந்தவர் உடல் கொழும்பு நகரில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திருச்சி விமான நிலைய நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும், இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.