திருச்சி, மே 15: திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் ஷேக் (52). இவர் உறையூர் சாலை ரோட்டில் சில்லி சிக்கன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மாலை வந்த ஒருவர், ஷேக்கிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் கடையை அடித்து நொறுக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500ஐ பறித்து சென்றார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து ஷேக்கிடம் பணம் பறித்த உறையூரை சேர்ந்த வேல்முருகன்(51) என்பவரை கைது செய்தனர். இவர் மீது உறையூர் போலீசில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement