தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி 3வது வார்டு சேசப்பாநாயுடு குட்டை பகுதிக்கு செல்லும் மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி, நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(53) என்பவர், தனது நிலத்தின் வழியாக எப்படி சாலை அமைக்கலாம் எனக்கூறி தகராறு செய்துள்ளார். இதனால் அவருக்கும், சாலை பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, சேகரை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையிலடைத்தனர்.
+
Advertisement