சாத்தூர், ஜன.25: சாத்தூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாத்தூர் கணபதியாபுரத்தில் பொதுப்பாதையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் அதனை, பொதுமக்கள் பயண்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சாத்தூர் வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று காலை கணபதியாபுரத்தில் பொதுப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் ராமநாதன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.