திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திருப்பூர் மற்றும் உடுமலை ஆகிய மையங்களில் மைய நிர்வாகி 1, களப்பணியாளர்கள் 5, பல்நோக்கு உதவியாளர் 1 ஆகிய பதவிகள் காலியாக உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இது சமுக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மைய நிர்வாகி பதவிக்கு 13 பேரும், களப்பணியாளர் பதவிக்கு 22 பேரும், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 13 பேரும் கலந்து கொண்டனர்.
+
Advertisement


