Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை ஊரக வளர்ச்சி தலைமை பொறியாளர்கள் ஆய்வு செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில்

செங்கம், ஜூன் 22: செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில் சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை சென்னை தலைமை ஊரக வளர்ச்சி தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். செங்கம் சட்டமன்ற தொகுதியில் கண்ண குருக்கை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சிட்கோ அருகாமையில் சமத்துவபுரம் கட்டுவதற்கு உண்டான இட ஆர்ஜித பணிகள் ஏற்கனவே வருவாய் துறை மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் தலைமை பொறியாளர்கள் சடையப்பன், சேதுராமன் உட்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று கண்ணகுருக்கை கிராமம் அருகே சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தில் தமிழ்நாடு சமூக வன தோட்டத்தில் மரங்கள் அதிகம் உள்ளது. அந்த பகுதியினை எந்த இடையூறும் செய்யாமல் இயற்கை சூழலை ஒட்டி அந்த பகுதியை அப்படியே விட்டுவிட்டு அதற்கு பின்புறம் மலை குன்று பகுதியாக உள்ள இடத்தினை முறையாக சமன் செய்து அந்த இடத்தில் சமத்துவபுரத்திற்கு தேவையான இடத்தினை அளவீடு செய்து, அந்த பகுதியை சமம் செய்து அந்தப் பகுதியில் சமத்துவபுரம் கட்டிடங்கள் கட்டிக்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இயற்கையாக உள்ள மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காக வகையில் அருகாமையில் காலியாக உள்ள குன்று மேட்டுப்பகுதியை சமம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனையின் போது திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன், ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செல்வி, பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன் மற்றும் கண் ணகுருக்கை.கோலா பாடி கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆய்வு செய்யும் பணியின் போது உடன் இருந்தனர்.