கீழக்கரை, மே 19: ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் 850ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 9ம் தேதி மவ்லீது ஷரீப் உடன் துவங்கியது. நேற்று மாலை அடி மரம் ஏற்றப்பட்டது. அந்த மரத்தில் இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ச்சியாக மே 31ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கி ஜூன் 1ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஷரீப்பிற்கு புனித சந்தனம் பூசப்படுகிறது. ஜூன் 7 மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், தர்ஹா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம், அஹமது இபுராஹீம், உசேன், செய்யது சுல்தான் இபுராஹீம், செய்யது பாதுஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement