Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

சத்தியமங்கலம், மே 26: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், டி.என் பாளையம், கடம்பூர், பவானிசாகர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், தாளவாடி, ஜீரஹள்ளி, கேர்மாளம் ஆகிய 10 வனச்சரகங்களில் கடந்த 24ம் தேதி வியாழக்கிழமை காலை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கணக்கெடுப்பு விபரங்களை சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.