சிவகங்கை, பிப். 16: சிவகங்கை காமராஜர் காலனி பெண்கள் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்து பேசினார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி சுப்பையா முன்னிலை வகித்தார். பொது சட்டம், சொத்துரிமை குறித்த சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் மற்றும் பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


