Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, மே 20: திருச்செங்கோடு, சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டியதன் அவசியம், அதற்காக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், சிறப்புகளை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜேகேஎஸ் மாணிக்கம், திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன், குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, பரமத்திவேலூர் தொகுதி பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர்கள் நடேசன், கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், செல்வராசு, மல்லை பழனிவேல், தாமரை, மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திராணி, மயில்சாமி, திருநாவுக்கரசு, சமூக வலைதள மாநில பொறுப்பாளர் திருநங்கை ரியா, மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ராஜபாண்டி, ராஜவேல், மொளசி ராஜமாணிக்கம், பாலாஜி, பாலசுப்ரமணியம், சுரேஷ் பாபு, ரமேஷ், சாதிக், கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.