Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவையில் வைகோ ஏப்.16ல் பிரசாரம்

கோவை, ஏப். 13: கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் அ.சேதுபதி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார் சிறப்புரையாற்றினார். இதில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகிற 16ம்தேதி (செவ்வாய்) கோவை வருகை தரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, அன்றையதினம் மாலை 6 மணியளவில் அவர் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாநகர மாவட்ட துணை செயலாளர்கள் பயனீர் தியாகு, சித்ரா தங்கவேல், சு.தூயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, பொ.சு.முருகேசன், எல்.லூயிஸ், மு.ராமநாதன், கே.பழனிச்சாமி, வெ.சு.சம்பத், சாக்கு பாலு, குறிச்சி செல்வராஜ், சி.மணிக்குமார், குனிசை சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் பேங்க் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.ராமச்சந்திரன், பாலு என்கிற பாலசுப்ரமணியம்,

மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பழையூர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜன், விவசாய அணி அமைப்பாளர் வெ.சு.காளிச்சாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பீளமேடு கணேசன், ஜிதேந்திரன், மாணவர்அணி துணை அமைப்பாளர் அருள்சக்தி,

பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சதீஷ் என்கிற சவுரிராஜன், மகளிர் அணி அமைப்பாளர் சுஜிதா தர்மராஜ், துணை அமைப்பாளர்கள் காந்தாமணி, புஷ்பா கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பவானி ஆறு வற்றி குட்டை போல் காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.