Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவையில் ஜூன் 28ல் ரஷ்ய கல்வி கண்காட்சி

கோவை, ஜூன் 26: கோவை அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் ஓட்டலில் ரஷ்ய மருத்துவ கல்வி கண்காட்சி வரும் 28-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக கோவையில் ஸ்டடி அப்ராட் நிறுவன மேலாண் இயக்குனர் சுரேஷ்பாபு, வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலையின் கல்வி நிபுணர் மெல்கோனியன் கோர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 5 ஆயிரம் மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் 8 ஆயிரம் மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய தேசிய மருத்துவமனை ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் மருத்துவம் படிக்க பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத தேர்ச்சி மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், கடந்த மே மாதம் சென்னை, கோவை, மதுரையில் நடத்தப்பட்ட கல்வி கண்காட்சியின் மூலம் 3 ஆயிரம் இடங்கள் வரை நிரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது மருத்துவ படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் நடக்கிறது. அதன்படி, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், ரஷ்ய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் சார்பில், வரும் 28-ம் தேதி கோவை அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் ஓட்டலில் ரஷ்ய கல்வி கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலை, வோல்கோகிராப்ட் மாநில மருத்துவ பல்கலை, காண்ட் பால்டிக் பெடரல் பல்கலை, மாஸ்கோ விமான போக்குவரத்து கல்வி நிறுவனம், பார் ஈஸ்டர் பெடரல் பல்கலை ஆகியவை பங்கேற்கிறது. கண்காட்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 92822-21221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.