Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு வாசிப்புத் திறன் புத்தகங்கள் வழங்கல்

மன்னார்குடி, ஜூலை 15: கோட்டூர் ஒன்றியத்தில் 104 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு வாசிப்புத் திறன் வளர்ப்பதற்காக தமிழக அரசால் நூலக புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலக பாட வேலைக்காக ஒரு பாடவேளை வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை செழுமைப் படுத்தும் பொறுத்து செயலி மூலம் ஆசிரியர்கள் நூலக பாட வேலை யை பதிவு செய்து உள்ளனர்.

இதில்மாணவர்கள் எந்த புத்தகங்கள் படித்தார்கள், இந்த புத்தகங்கள் இந்த வாரம் வாசிக்கப்பட்டது என பல்வேறு கேள்விகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோட்டூர் வட்டார கல்விஅ லுவலகத்தில் பள்ளிகளுக்கான இலவச நூலக புத்தகங்கள் தொடக்க பள்ளிகளுக்கு 30 நூல்களும், நடுநிலை பள்ளிகளுக்கு 40 நூல்களும் என பிரிக்கப்பட்டு நேற்று வழங்கப் பட்டுள்ளது. அதன்படி நேற்று பெரிய குருவாடி, அன்னுக்குடி, அக்கரை கோட்டகம், ரெங்கநாதபுரம், விக்ரபாண்டியம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலர் இராமசாமி, அலுவலக பணியாளர்கள் குமரன், முகில், முருகன், பானுமதி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வாசிப்பு திறனுக்காக தேன்சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர் என மாத, பருவ இதழ்கள் பல இலட்சம் செலவில் தமிழக அரசால் பள்ளிகளுக்கு அஞ்சல் வழி மூலம் வருகிறது. பள்ளிகள் தோறும் வாசிப்பு இயக்கம் பலன் பெறும் வகையில் தொடர் நடவடிக்கைகாக பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.