Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ.5: கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், வார்டு 64ல் முகமது உசேன் காலனி 5வது குறுக்கு தெருவில் 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பல்நோக்கு மையக் கட்டிடம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஜி.கே.எம். காலனி 24வது “ஏ” தெருவில் 58 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 பல்நோக்கு மையக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், பல்நோக்கு மையக் கட்டிடத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும், புதிய குடும்ப அட்டைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் நெஞ்சார நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி,

ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா.சுப்பையன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன், நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி.கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.