பண்ருட்டி, மே 14: பண்ருட்டி அருகே கொக்குபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). கொத்தனார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அயனவேல் குடும்பத்திற்கும் கோயில் திருவிழாவில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் தட்டாஞ்சாவடி சலூன் கடை முன்பு மணிகண்டன், அவரது அண்ணன் கோபியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அயனவேல் மகன்கள் சிபிராஜ், அபிராஜ் மற்றும் மோகன்ராஜ், சுரேந்தர் ஆகியோர் மணிகண்டனை திட்டி இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பண்ருட்டி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
+
Advertisement