மதுரை, டிச. 18: செல்லூர் அகிம்ஷாபுரத்தை சேர்ந்த முத்துசரவணன்(40). இவர் நரிமேடு செக்கடி தெருவில் உள்ள அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில் முத்துசரவணன், பேச்சு மூச்சியில்லாமல் கிடப்பதாக வந்த தகவலையடுத்து முத்து சரவணனின் மனைவி ரேவதி மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர்.
அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ரேவதி தல்லாகுளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


