Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேமரா மூலமாக லாரிகள் கண்காணிப்பு

பெ.நா.பாளையம், ஜூலை 7: கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடிகாரி ஆய்வு செய்தார். இடிகரை பேரூராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் மணியரான் பாளையம் மற்றும் ஜெம் கார்டன் பகுதியை இணைக்கும் பள்ளம் மற்றும் இடிகரை கேஸ் கம்பனி பகுதியை இணைக்கும் பள்ளத்தின் பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள பாலம் மற்றும் கழிப்பிடங்கள் புனரமைக்கும் பணிகளுக்கான இடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை நேற்று காலை ஆய்வு செயதார். அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெனர்த்தனன், செயல் அலுவலர் விஜயகுமார், துணைத்தலைவர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோவை, ஜூலை 7: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரில் மாநகராட்சியின் 100 வார்டில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டு வருகிறது. குப்பைத்ெதாட்டியில் சிலர் ஓட்டல் கடைகளின் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக தெரிகிறது. இந்த சாம்பலில் உள்ள எரியும் கரிதுண்டுகளும் குப்பைகளுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள். முறையாக தரம் பிரிக்காமல் லோடு கணக்கில் குவியும் குப்பைகளில் எளிதாக தீப்பிடித்து விடுகிறது. புதிதாக கொட்டப்படும் குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி அது தானாகவே தீப்பிடித்து எரிவதாகவும் தெரிகிறது. எதனால் எப்படி தீப்பிடிக்கிறது என உறுதி செய்ய முடியாமல் குப்பைக்கிடங்கில் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடுவது வாடிக்கையாகி போய்விட்டது.

குப்பைக்கிடங்கு வளாகம் 630 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், சுமார் 450 ஏக்கரில் 25 லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளது. குப்பைகளில் பரவும் தீயை உடனடியாக அணைப்பது சாத்தியமில்லாத நிலையிருக்கிறது. தண்ணீர் மற்றும்

பல டன் மண் கொட்டி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சவாலாக இருக்கிறது. மழை பெய்தால் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதும், பூச்சிகள் தொல்லையும் இருக்கிறது. பல இடங்களில் மக்கள் மூச்சுத்திணறலுடன் போராடி வருகின்றனர். குப்பைக்கிடங்கு விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை. பல ஆண்டாக கண் எரிச்சல், மூச்சு திணறல், துர்நாற்றத்துடன் போராடுகிறோம் என வெள்ளலூர் பகுதி மக்கள் புலம்புகிறார்கள். குப்பை கிடங்கு வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் வந்து செல்கிறார்களா? என கண்காணிக்கப்படுகிறது. லாரிகளையும் குப்பை கிடங்கு வளாகத்தில் கண்காணித்து வருகிறார்கள். தீ பற்றினால் உடனடியாக அணைக்க, பூச்சிகளை அழிக்க மாநகராட்சி குழுவினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.