Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 14: சிவகங்கையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும், சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு ஜூலை 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி காலம் 1 ஆண்டு. இப்பயிற்சி 2 பருவங்களை கொண்டது. 10,12ம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். ஜூலை 19ம் தேதி www.tneu.tn.gov.in@gmail.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 இணைப்பு வழியாக செலுத்த வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த சான்றிதழ் நகல்களையும் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.18,750 முழுவதும் ஒரே தவணையில் இணையவழி மூலம் செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பத்தூர் சாலை, காஞ்சிரங்காலில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 04575-243995 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.