குளச்சல், ஏப்.12: குளச்சல் அருகே குறும்பனை சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி பிள்ளை. அவரது மனைவி ஜெயஷீலி (58). இவர் சம்பவத்தன்று குறும்பனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென குறும்பனை - குளச்சல் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக குறும்பனை தோமையார் தெருவை சேர்ந்த ஆல்பர்ட் மகன் லிஜோ பெர்டஸ்(24) என்பவர் ஓட்டி வந்த பைக் திடீரென ஜெயஷீலி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயஷீலி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயஷீலியின் மகன் மரிய அஜய் (33) என்பவர் அளித்த புகாரின் பேரில் பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்திய லிஜோ பெர்டஸ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.