Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூர் அருகே குப்பையில் உணவு தேடிய கரடி

ஊட்டி, ஜூன் 28: நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு உலா வருவதை காண முடியும்.

இந்நிலையில் குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்குட்பட்ட வசம்பள்ளம், பழத்தோட்டம் பகுதியில் பொது மக்கள் குப்பைகளை பிளாஸ்டிக்குடன் வீணான உணவு பொருட்கள் மற்றும் கழிவுகளை சாலையில் வீசி செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உணவு தேடி உலா வரும் கரடி ஒன்று சாலையோர குப்பைகளில் ஏதேனும் உணவு கிடைக்கிறதா என தேடி வருகிறது.

தொடர்ந்து உணவு கழிவு இருந்த ஒரு பிளாஸ்டிக் மூட்டையை இழுத்து கொண்டு ஓடுகிறது. உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக்கையும் உண்ணும் பட்சத்தில் உடல் நிலை பாதித்து இறக்க கூடிய அபாயமும் உள்ளது. இதனை சிலர் வீடியோ எடுத்தனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.