ராமநாதபுரம், மார்ச் 15: பரமக்குடியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடியது தொடர்பாக குணா (எ) சிவக்குமார் என்பவரை பரமக்குடி தாலுகா போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவக்குமார் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்பி சந்தீஷ் அளித்த பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதுபோல, தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.