கெங்கவல்லி, மே 19: வீரகனூர் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே லத்துவாடி ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(49). இவரது மனைவி தமிழ்ச்செல்வி(44). இவர்களுக்கு கடந்த 12ம்தேதி குடும்ப தகராறு ஏற்பட்டதால், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த இருவரும் விஷம் அருந்தி வீட்டில் மயங்கினர். வெளியே சென்று விட்டு, வீடு திரும்பிய மகன் பெற்றோர் நிலை கண்டு திடுக்கிட்டார். இதையடுத்து, இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement


