ஈரோடு, நவ.8: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் உள்ள பிரதான சாலையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர். இப்பகுதிகளில் தினமும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுதோறும் வந்து குப்பைகளை வாங்கிச் சென்றாலும், அவர்கள் வரும் நேரங்களில் குப்பைகளை கொடுக்க இயலாத குடியிருப்பு வாசிகளும், தொடர்ந்து குப்பைகளை அவர்களிடம் கொடுக்காத வீட்டினரும் அப்பகுதியில் உள்ள காலியிடங்களில் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. குப்பை கொட்ட கூடாது என குறித்து, மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைத்தாலும் பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் குப்பைகளை கொட்டி வந்தனர்.
இதுகுறித்து, நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்ட து. இதையடுத்து, அதன் எதிரொலியாக மா நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று குப்பைகளை உடனடியாக அகற்றினர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகள், கழிவுகளை தவறாமல் எங்களிடம் கொடுத்து சுற்றுப்புறத்தில் குப்பைகளை கொட்டாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


