மேட்டுப்பாளையம், ஜன.25: மேட்டுப்பாளையம் கல்லாறு ஸ்ரீசற்குரு ஆதிவாசிகள் குருகுலப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்வு நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மேரி பாக்கியம் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அரிமா. ஜெயராமன் தேசிய கீதத்தின் பெருமையையும், அதன் வரலாற்றையும் தேசியக் கொடியின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. மேலும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பள்ளியின் ஆசிரியை தூயமலர்அரசி நன்றி கூறினார்.
+
Advertisement


