நாகர்கோவில், ஜூன் 14: காஷ்மீரில் இந்து யாத்ரீகர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மூலம் குடியரசு தலைவருக்கு மனு அளிக்க அகில பாரத விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் (தென் தமிழகம்) சேதுராமன் அறிவுறுத்தலின் பேரில் குமரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பஜரங்தள் மாவட்ட அமைப்பாளர் கோபிலால் தலைமையில் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.நிர்வாகிகள் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, மாநில தர்ம பிரசார அமைப்பாளர் காளியப்பன், மணிகண்டன், காசி விஸ்வநாதன், ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement