திருத்தணி, மே 31: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பெரிய தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம ஊராட்சி சார்பில் பைப் லைன் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் 40க்கும் மேற்பட்டோர் நேற்று காலி குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்படும் என்று உறுதி அளித்து கூறியதை ஏற்ற பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
+
Advertisement


