Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்

காரைக்குடி, ஜூன் 20: காரைக்குடி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. வட்டாசியர் தங்கமணி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். சாக்கோட்டை உள்வட்டத்தை சேர்ந்த மாத்தூர், அரியக்குடி, இலுப்பக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கணினி திருத்தம், பட்டா மாறுதல், பஸ்வசதி உள்பட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

கிராம நிர்வாக அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான அடங்கல், சாகுபடி விவரம், பட்டா மாறுதல் உள்பட அனைத்து வகையாக பதிவேடுகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தணிக்கை செய்தார். முன்னதாக நில அளவை உபகரணங்களை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து 21ம் தேதி காரைக்குடி உள்வட்ட பகுதிக்கும், 25ம் தேதி மித்திராவயல் உள்வட்ட பகுதிக்கும் ஜமாபந்தி நடக்கவுள்ளது. இதில் வட்டாட்சியர்கள் கந்தசாமி, வெங்கடேசன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.