சிங்கம்புணரி, செப்.29: சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்களம் ஊராட்சியில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தோட்டக்கலை பயிர்களின் அறுவடை பலன்களை சந்தைப்படுத்துதல் மேம்படுத்துதல் திட்டத்தின்படி, நிலமில்லா விவசாய தொழிலாளர்களுக்கு நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிளை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு தலா 15, ஆயிரம் வீதம் காய்கறி வண்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பயனாளிகளுக்கு வழங்கினார்.இதில் துணை இயக்குநர் குருமணி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பூமிநாதன் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகரச் செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement