தாரமங்கலம், அக்.1: தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் காணாமல் போன செல்போன்கள் குறித்து, தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில், செல்போன் ஐஎம்ஐ நம்பர் மூலம் விசாரணை செய்து, அதனை பயன்படுத்துவரிடம் கூறி போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார், செல்போன் உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து செல்போன்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
+
Advertisement


