Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சி, செங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

காஞ்சிபுரம்: டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாகும். இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது, 2024ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கு இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதிற்கான விண்ணப்பத்தினை இணையதள முகவரி http://awards.gov.in/- யில் விண்ணப்பிக்க இன்று (30.6.2025) நாளாகும். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண் 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மாவட்ட விளையாட்டு, அலுவலகம் அறை எண்: 203 f பிளாக் (அல்லது) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கைபேசி எண் 74017 03461 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.