Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், மே 30: காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டிற்கான ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திடலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்திடவும் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய 13.6.2025ம் தேதி வரை கால அளவு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு தொடர்புகொள்ள முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம். 94449 08701, 94459 43451, 90922 80324 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.