பரமக்குடி,ஏப்.18: நேஷனல் ஹெரால்டு நாளிதழின் சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பரமக்குடியில் காந்தி சிலை முன்பு கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சரவண காந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் பாபு தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன், மாநில பேச்சாளர் ஜெய்னுல் ஆலம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


