Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளிப்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

ஈரோடு, ஜூலை 10: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவது ஆலோசனை கூட்டம் நடந்தது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவது தொடர்பா கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் கட்டிடம் கட்டுவது, தற்போது 100 மருத்துவ மாணவ-மாணவிகள் சேர்க்கையாக உள்ள இளநிலை மருத்துவ இடங்களை 150 ஆக உயர்த்துவது, 150 மாணவர் சேர்க்கைகான பற்றாக்குறையாக உள்ள பயிற்றுவிப்பு பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள், கூடுதல் இயந்திரங்கள் வாங்குவது பற்றியும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ரூ.34 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணியினை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சீமாங் (மகளிர் மற்றும் மகப்பேறு, பச்சிளங்குழந்தைகள்) கட்டிடத்தின் விரிவாக்க பணி, கல்லூரியில் உள்ள மாணவர்கள் பயிற்றுவிப்பு அறை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மருத்துவமனையில் நடக்கும் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில்குமார், துணை முதல்வர் டாக்டர் மோகனசௌந்திரம், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில் செங்கோடன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.