Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கைது

மாதவரம், மே 14: திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ₹67 ஆயிரம் மதிப்புள்ள 27 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டி நடக்கும் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் திருவல்லிக்கேணி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த பரத்குமார் (22), சல்மான் காதர் (19), புதுச்சேரியை சேர்ந்த குருபிரசாத் (23), ஆலன்ராஜ் (18), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் (23), விழுப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (26), திருச்சியை சேர்ந்த ஜீவானந்தம் (26), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா (23), வண்டலூரை சேர்ந்த யுவராஜ் (31), வடபழனியை சேர்ந்த கிஷோர் (25) ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ₹67,100 மதிப்புள்ள 27 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.