Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்காதலனை நண்பர்களுடன் சென்று தாக்கிய காதலன் குடியாத்தத்தில் பரபரப்பு ஒரே சமயத்தில் 2 பேரை இளம்பெண் காதலித்ததால்

குடியாத்தம், செப்.29: குடியாத்தத்தில் ஒரே சமயத்தில் 2 பேரை இளம்பெண் காதலித்ததால் கள்ளக்காதலனை ஆதரவாளர்களுடன் காதலன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண்ணும் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, விரைவில் அவர்கள திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 25 வயது பெண், திருமணமான வேறு ஒரு நபருடன் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் இளம் பெண்ணின் காதலனுக்கு தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் தான் காதலித்த இளம் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் குடியாத்தம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனை அறிந்த இளம் பெண்ணின் காதலன் அவரது நண்பர்களுடன் சென்று கள்ளக் காதலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த இளம்பெண்ணின் கள்ளக்காதலன், காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 6 பேரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.