தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மதிகோண்பாளையம் பெரமன்தெருவை சேர்ந்தவர் சங்கீத்குமார். இவரது மகள் லோகேஸ்வரி (20), காரிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சியும் பெற்று வந்தார். கடந்த 12ம் தேதி, கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற லோகேஸ்வரி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று அவரது தாய், மதிகோண்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


